Saturday, July 2, 2011

பாட்டு




















உரல் நிறைய நெல் நிரப்பி
உலக்கையிலே குத்தி குத்தி
அவள் எடுத்த கதை ஒன்ன
உன் அப்பனுக்கு நான் சொன்ன

அவள் எடுத்து பால் ஊத்தி
தேன் ஊத்தி பாகு ஊத்தி
பக்குவமா பதபடுத்தி
செவ்வாயில் ஊட்டிவிட்டேன்

துப்பிவிட்டு திட்டிவிட்டு
துவார பானை எட்டிவிட்டு
சுட்டிபையன் சுறு சுறுப்பாய்
விளையாட போனானே

முழங்காலில் முட்டிகிட்டு
கடலைவாங்கி கொரிச்சிகிட்டு
கால்நடையாய் விதியிலே
நோண்டிகிட்டு வந்தானே

வெந்நீரில் ஒத்திடமும்
சேற்று நீர் வைத்தியமும்
செவ்வாழ தண்டோட
எலும்புசெற கட்டிவிட்டு


பாடல் பயணத்துடன்
சதீஷ்

Wednesday, June 29, 2011

முடிவில்லா பயணம்


கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே என்று சொல்வார்கள், எனது சென்ற கதை பலரையும் கவர்ததால் மேலும் எனது கதை பயணத்தை தொடருகிறேன்.

"டிங்.." கோவிலில் அடித்த மணி ஓசை கேட்க்கும் துரத்தில் தான் அந்த வீடு. விட்டின் எல்லா கதவுகளும் மூடப்பட்டு இருந்தது. நான் ஒரு சன்னல் வழியாக விட்டின் பின் புறத்தில் இருக்கும் சிறு குளத்தை கண்டு கொண்டு இருந்தேன்.

அங்கே சற்றே அடுப்பில் இருந்து இறக்கி வைக்க பட்ட வெந்நீர் நிரப்பப்பட்ட இரண்டு அண்டாக்களில் ஒன்றில் வனத்தை பார்த்ததுபோல் வாய் திறந்து கொண்டு அந்த வெண் நீரிலே மிதந்து கொண்டு இருக்கும் ஒரு சொம்பும் என் கண்களுக்கு தென்பட்டது.

அங்கே யாரோ குளிப்பதற்காக சந்தானம் பன்னீர் வெந்நீர் மற்றும் செம்பருத்தி பெரியநெல்லி சீகக்காய் வெந்தயம் கற்றாளை போன்ற பொருட்கள் போட்டு நீர் விட்டு குழைத்த கலவையும் அங்கே இருந்தது. மேலும் முன்றளவு நல்லெண்ணெய் இரண்டளவு வேப்பெண்ணை ஓரளவு தேங்காய் என்னை என்று மேற்குறிய அளவுகோலில் கலந்த என்னை கலவையும் அங்கே இருந்தது.

அங்கே அந்த மணி ஓசை அடங்கும் முன்னே குளத்து நீரில் இருந்து ஒரு பெண் எழுந்து வந்தால். அவள் அங்கு இருந்த சொம்பில் வெந்நீர் எடுத்து தனது தலையில் ஊற்றினால். அவ்வாறு அவள் ஊற்றி முடித்ததும் அவள் தலையில் இருந்து சொட்டிய நீர் மழை விட்ட தூறல் போல் இருந்தது.

அவள் தனது இருகைகளும் முவேன்னை எடுத்து தனது தலையில் ஊற்றியது கார் மேகத்தை குளிக்கவைத்து போல் இருந்தது. சட்டென நான் எதிர் பாரத விதமாக அவள் தனது உடையை எடுத்து விசினால். அந்த உடை தென்றலை தழுவிக்கொண்டு என் முகத்தில் வந்து விழுந்தது. நான் அந்த ஈர உடையை எடுத்து பார்த்தல் பளிச்சென்று என் கண்கள் கூசும் படியாக ஒளி விசியது.

ஒளியை கண்டு கண்கூசியதால் அது எங்கிருந்து வருகிறது என்று கண்டு பிடிக்க முடிய வில்லை. பிறகு அவனுக்கு அவனது நண்பன் குரல் கேட்டது "சிக்கிரம் வாடா நேரம் ஆகிடுச்சி". பின்பு நான் கண்ணை கசக்கி விட்டு பார்த்தேன் அங்கே இருந்த குண்டு மின்விளக்கு தான் என் கண்ணை கூச காரணம் என அறிந்தேன். நானும் சென்று குளித்துவிட்டு என் நண்பனும் நானும் பேருந்தில் மகாபலிபுரம் சென்றோம். பயணத்தின் போது நான் அந்த வீட்டில் கண்ட கட்சயை சொன்னேன் அதற்க்கு அவன் என்ன சொல்கிறாய் நீ என்னோடு தானே இருந்தாய் எப்படி உன்னால் நீ சொன்ன வீட்டுக்கு சென்று இருக்க முடியும் என்றான். அப்போது தான் எனக்கே தெரிந்தது அது கனவு என்று ஏன் என்றால் நான் மணி ஒலித்ததாக கூறிய கோவில் எங்கள் விட்டின் அருகே தான் உள்ளது ஆனால் அங்கே நான் கேட்டது போல் மணியே இல்லை ஓசை எப்படி வரும்.

பின்பு ஒரு வழியாக மகாபலிபுரம் சென்றோம். அங்கே நான் கண்ட கட்சிகள் என்னை வெகுவாக கவர்ந்தன, ஒரு வேலை நாம் பல்லவ அரசர் ஆட்சிக்கு உட்பட்ட நகரத்துக்கு வந்துவிட்டோமோ என்றும் தோன்றியது. அங்கே உளி கல்லில் ஆடிய நடனம் என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக ஆனது. இதற்க்கு முன்பே நான் மகாபலிபுரம் வந்து இருக்கிறேன் அப்போது சிலைகள் பல கண்டதும் உண்டு ஆனால் சிற்பம் வடிக்கும் அழகை இப்போது தான் முதல் முறை காண்கிறேன்.

நானும் என் நண்பனும் அங்கே இருந்த கடற்கரைக்கு காற்று வாங்க சென்றோம். அங்கே அழகிய கற்கோயில், விளையாடி கொண்டிருந்த குழந்தைகள், பார்வையிலே தனை மறந்த காதலர்கள், சிற்பம் வடிக்கும் சிற்பிகள், தமிழ் மண்ணில் தமிழ் அறியாது மழலை மொழி பேசும் பிள்ளை என கட்சிகள் இருந்தன. இவ்வாறு இருந்த போதிலும் எதையும் எங்களை காண விடாமல் விசிய தென்றல் கண்சொருக வைத்து விட்டது. திடீர் என நான் கண்திரந்ததும் ஆழி பேரலை எங்களை நோக்கி பாய்ந்து வந்தது உடனே என் நண்பனை எழுப்பி நாங்கள் இருவரும் எழுந்து ஓட ஆரமித்தோம். எங்கள் வேகத்தை விட வேகமாக வந்த பேரலை எங்களை மண்ணில் தள்ளி எங்கள் மேல் பாய்ந்து ஓடியது. பிறகு மெல்ல பின்வாங்கி நீர் வற்றி போனதும் நான் எழுந்து பார்த்தால் என் நண்பனை காண வில்லை. ஆனால் அவன் என்னை அழைப்பது மட்டு கேட்டது நான் அழுதுகொண்டே இருந்தேன். ஆனால் நான் முழுவதும் நினைந்து இருந்ததையும் என் நண்பன் காண வில்லை என்பதையும் தவிர என்னக்கு எதுவும் நினைவு இல்லை.

முடிவில்லா பயணம் தொடரும்...

கதைபயனதுடன்
சதீஷ்

Monday, June 27, 2011

பயணம்

நான் எழுதும் முதல் சிறு கதை...

"சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வரை செல்லும் மின்தொடர் ஐந்து நிமிடங்கள் கால தாமதமாக இரண்டாம் நடைமேடைக்கு வரும் என்று எதிர் பார்க்க படுகின்றது". அன்று அறிவிப்பையும் மீறி மின்தொடர் பேசின் பால சந்திப்பின் இரண்டாம் நடைமேடைக்கு வந்து நின்றது நானும் என் நண்பனும் வண்டியின் மூன்றாம் பெட்டியில் ஏறி அமர்தோம். வண்டி புறப்பட்டதும் மெதுவாக தான் சென்றது. திடீர் என எங்கிருந்தோ ஒரு பாட்டு "தீபிடிக்க தீபிடிக்க..." என்று பாட்டின் குரல் நின்றுவிட்டது. எனது கைபேசியின் அலறல் என புரிந்து கொண்ட என் நண்பன் அதில் வது இருந்த செய்தியை படித்தான். "இந்த வண்டி எந்த நிலையத்திலும் நிற்காது" என்று அதில் செய்தி வந்தது.

அதே போன்று வண்டி அடுத்த நிலையத்தில் நிற்க வில்லை. அதிர்ந்து போன என் நண்பன் விக்னேஷ் அதை என் இடம் சொல்லும் போது மீண்டும் "தீபிடிக்க தீபிடிக்க..." என்று எனது கைபேசியின் அலறல், இது யார் கைபேசி என்று நான் கேட்க உனது என்றான். ஆனால் நான் இந்த பாட்டை வைக்க வில்லை என்று கூறினேன். பிறகு செய்தியை படித்தான் "சிவப்பு சங்கிலியை இழுக்கவும் இல்லை உங்கள் பின் பெட்டி வெடித்து விடும்" என்று இருந்தது.

அதிர்ந்து போன அவன் சிவப்பு சங்கிலியை இழுக்க போனான், நான் அவனை தடுத்து இது எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள் யாரோ செய்கிறார்கள் நம்பாதே என்றேன். சட்டென பின் இருந்து ஒரு பயங்கர சத்தம் திரும்பு பார்த்து இருவரும் அழுது விட்டோம் ஆம் செய்தியை போலவே நடந்தேறியது.

மீண்டும் "தீபிடிக்க தீபிடிக்க..." கைபேசியின் அலறல் தொடர்ந்தது விக்னேஷ் எடுத்து படித்தான் "கதவின் அருகில் இருக்கும் நபரை கிழே தள்ளவும் இல்லை என்றால் உனது தலை வெடிக்கும் அந்த நபரும் கிழே விழுவார்". அதிர்ந்து போன இருவரும் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தோம்.

கதவின் அருகில் நின்று கொண்டு இருந்தவரை காண வில்லை, "விக்னேஷ் இங்க பாருடா அவரை காணும் ம் ம் ம் ....". ஆஆஅ .. (வாயில் இருந்து காற்று மட்டும் வந்தது) விக்னேஷ் தலை வெடித்து அவனது காது என் அருகில் விழுந்து கிடந்தது. என் சட்டை எல்லாம் அவனது இரத்தம். வண்டியின் வேகம் குறையாமல் வண்டியன் சத்தத்துடன் "தீபிடிக்க தீபிடிக்க..." அதிர்ந்தது செய்தியை எடுத்து படித்தேன் "வண்டியில் இருந்து கிழே குதிக்கவும் ... தீபிடிக்கும் தீபிடிக்கும் ...". என்ன செய்வது என தெரியாமல் கைபேசியை சன்னல் வழியாக வெளியே வீசினேன்.

மீண்டும் "தீபிடிக்க தீபிடிக்க..." டமார் என வெடிக்கும் சத்தத்தில் விக்னேஷின் குரலில் "என்ன டா இன்னும் எழுந்திரிகிலைய ..." பதறி எழுந்து பார்த்தால் அத்தனையும் கனவு, மீண்டும் "தீபிடிக்க தீபிடிக்க..." கைபேசியின் அலறல் அது எழுப்பு மணியின் ஓசை அனைத்து விட்டு மீண்டும் தொடங்கினேன் எனது கனவின் பயணத்தை...

கதை பயணத்துடன்...
சதீஷ்